// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** எம்ஜிஆர் சிலைக்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

எம்ஜிஆர் சிலைக்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

 மறைந்த எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாள் விழா அமமுக சார்பில் அவரது திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் கவுன்சிலருமான செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்ட செயலாளரும், கவுன்சிலருமான செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 


இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, இணைச் செயலாளர் லதா, துணைச் செயலாளர்கள்  தனசிங், ஹேமலதா, நிர்வாகிகள்  டோல்கேட் கதிரவன், நாகநாதர் சிவகுமார், கல்நாயக் சதிஷ்குமார், ரமணி, மதியழகன், தருண், உறையூர் சாமிநாதன்,உமாபதி, நெல்லை லட்சுமணன், நல்லம்மாள்,ரஜினி, கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments