கல்வி கட்டணம் உயர்வை கண்டித்து திருச்சியில் கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்
அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரூபாய் 20000 என்றால் சுயநிதி பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களின் நிலை என்ன?தனியார் கல்லூரிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிக கட்டணத்தை வசூலிக்கும் திருச்சி தேசிய கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க உயர்கல்வி துறையை வலியுறுத்தியும் உடனடியாக திருச்சி தேசிய கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே தொடர்ந்து போராடி வரும் நிலையில் இன்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
0 Comments