BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி கே.கே.நகரில் புதிய ஜெயம் எம்பயர் அடுக்குமாடி குடியிருப்பு பூமிபூஜை விழா

திருச்சி கே.கே.நகரில் புதிய ஜெயம் எம்பயர் அடுக்குமாடி குடியிருப்பு பூமிபூஜை விழா

 திருச்சி கே.கே.நகர், எல்.ஐ.சி காலணி பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள ஜெயம் எம்பையர் அடுக்குமாடி குடியிருப்பின் பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. 


இந்த நிகழ்வில் எஸ் பி ஐ வங்கியின் திருச்சி மண்டல துணை பொது மேலாளர் நவீன் குமார், திருச்சி எஸ் பி ஐ வங்கியின் மண்டல மேலாளர் மதன், ஹெச்டிஎஃப்சி வங்கியின் துணைத் தலைவர் பாலமுரளி கிருஷ்ணன், விக்னேஷ் கல்வி குழுமங்களின் தலைவர் கோபிநாதன், விக்னேஷ் கல்வி குழுமங்களின் அறங்காவலர் லட்சுமி பிரபா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வாழ்த்துரை வழங்கினர். 


முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவர்களை ஜெயம் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனரும் கிரடாய் அமைப்பின் மாநில செயலாளருமான பொறியாளர் ஆனந்த் மற்றும் ஜெயராணி ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து இந்த  அடுக்குமாடி குடியிருப்பின் சிறப்பம்சங்கள் குறித்து ஜெயம் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் ஆனந்த் கூறுகையில்


தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருப்பது போன்ற அனைத்து வசதிகளுடன் நமது திருச்சியிலும் சர்வதேச தரத்தில் கேட்டட் கம்யூனிட்டி அப்பார்ட்மெண்ட் கட்ட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது தற்போது சாத்தியமாகியுள்ளது. அனைத்து வசதிகளுடன் மொத்தம் 175 வீடுகளைக் கொண்டதாக இந்த அப்பார்ட்மெண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் இருப்பதால் நேர்த்தியான வடிவமைப்புடன் தரமான பொருட்களைக் கொண்டு 2  ஆண்டுகளுக்குள் இதை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.


 அறிமுகப்படுத்திய இன்றைய தினமே எங்களின் வாடிக்கையாளர்களான திருச்சி வேல்முருகன் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன், டால்மியா சிமெண்ட் முன்னாள் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் நாராயணன் உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்டோர் தங்களுக்கான குடியிருப்பை முன்பதிவு செய்துள்ளனர். அறிமுக சலுகையாக இன்றிலிருந்து வரும் 18ம் தேதி வரை குடியிருப்பு முன்பதிவு செய்பவர்களுக்கு ஏழு முதல் 10 லட்சம் வரை சேமிப்பதற்கான பல சலுகைகள் உள்ளன. இந்த அரிய வாய்ப்பை வாடிக்கையாளர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments