// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** திருச்சியில் பாஜகவின் வடக்கு மண்டல நிர்வாகிகள் கிளை தலைவர்கள் சந்திப்பு

திருச்சியில் பாஜகவின் வடக்கு மண்டல நிர்வாகிகள் கிளை தலைவர்கள் சந்திப்பு

திருச்சி திருவெறும்பூர் வடக்கு மண்டல் நிர்வாகிகள் மற்றும் கிளை தலைவர்கள் திருச்சி பாஜக பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஆர் ஜி ஆனந்த் உடன் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்ற தலைப்பில் வாக்காளர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்தனர்  


திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் திருவெறும்பூர் வடக்கு மண்டல் சேர்ந்த மண்டல் நிர்வாகிகள், 13 கிளை தலைவர்கள், 4 பேர்  பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், 3   முக்கிய வாக்காளர்களை அவரவர் இல்லத்தில் நேரில் சந்தித்து அவர்களின் கடுமையான கட்சிப்பணியை பாராட்டி, 



ஆர் ஜி ஆனந்த் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசித்து, தாமரை சுவரோவியம் அவர்களின் பகுதிகளில் அதிகப்படியாக வரைய ஊக்குவித்து, இனிப்புடன் பிரதமரின் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது


இந்த நிகழ்வில் திருவரம்பூர் வடக்கு மாவட்ட தலைவர் திரு பி செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்

Post a Comment

0 Comments