BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி கண் திறந்த ஸ்ரீ கருமாரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

திருச்சி கண் திறந்த ஸ்ரீ கருமாரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

திருச்சி கண் திறந்த ஸ்ரீ கருமாரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா - சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.திருச்சி மலைக்கோட்டை வெல்லமண்டி நரசிம்மலு நாயுடு தெருவில் அமைந்துள்ள கண் திறந்த ஸ்ரீ கருமாரி அம்மன் திருக்கோவில் பரிவார ஸகித நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. 


முன்னதாக கடந்த 16ஆம் தேதி காவேரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பக்தர்கள் திருமஞ்சனம் எடுத்து ஊர்மலமாக வந்தனர் அதனைத் தொடர்ந்து 18-ம் தேதி முதல் கால யாக பூஜைகள் தொடங்கி 19-ம் தேதி இரண்டாம் கால யாக பூஜைகளும் 20-ம் தேதி மூன்றாம் கால பூஜைகள், விசேஷ திராவி ஹோமம், பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து 22 ஆம் தேதி இன்று மங்கல இசை, தேவார இசை, பூர்வாங்க பூஜைகளுடன் எட்டாம் கால யாக பூஜைகளுடன் பரிவார யாகசாலையில் இருந்து பரிவார மூர்த்தி களுக்கு கும்பாபிஷேகமும் மற்றும் சுந்தர விமான மகா கும்பாபிஷேகமும் மற்றும் கண் திறந்த ஸ்ரீ கருமாரி அம்மன் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

மேலும் கும்பாபிஷேக விழாவில் கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 





இந்த மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்  வெல்லமண்டி நடராஜன் அவர்களின் மகனும், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளருமான ஜவஹர்லால் நேரு இரு கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். 

மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை கண் திறந்த ஸ்ரீ கருமாரி அம்மன் திருப்பணி கமிட்டியினர் மற்றும் நண்பர்கள் குழு செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments