BREAKING NEWS *** டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் *** மத்தியில் அமையும் புதிய அரசு காவேரி பாலாறு குறுக்கே அணை கட்ட அனுமதிக்க கூடாது விவசாயிகள் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

மத்தியில் அமையும் புதிய அரசு காவேரி பாலாறு குறுக்கே அணை கட்ட அனுமதிக்க கூடாது விவசாயிகள் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

 மத்தியில் அமையும் புதிய அரசு காவிரி, பாலாற்றின் குறுக்கே அணைகட்ட அனுமதிக்ககூடாது என்றும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.


மிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது..இந்த செயற்குழு கூட்டத்திற்கு  தமிழகம் முழுவதும் இருந்து விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு உரை ஆற்றினர்கள்.இந்த கூட்டத்திற்கு பின் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்க மாநில தலைவர் விசுவநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்... அவர் கூறுகையில்..


இதில் விவசாயிகளின் கோரிக்கைகளை தங்களது தேர்தல் அறிக்கையாக வெளியிடுபவர்களுக்கு தங்களது ஆதரவு என்ற நிலைப்பாட்டின் படி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்டமாக்கப்படும், மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்தல் 100 நாள் வேலை திடடத்தில் ஈடுபடுபவர்களை விவசாய தொழிலுக்கு பயன்படுத்துதல் போன்ற கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையாக இந்தியா கூட்டணியில் வெளியிடப்பட்டு, ராகுல்காந்தி அறிவித்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.

மேலும் காவிரியின் குறுக்கே, பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவோம் என கர்நாடகா, ஆந்திரா அரசின் அறிவிப்புகள் தமிழக விவசாயிகளுக்க அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.காவேரி, பாலாறு குறுக்கே அணை கட்ட விவசாயிகள் மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், தமிழக அரசும், எதிர்கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவான குரல் எழுப்பி வருகின்றனர். 


இந்த சூழலில் பாலாறு, காவிரியின் குறுக்கே அணைகட்டுவதால் தமிழகத்தில் விவசாயம் அழிந்து‌ போகும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும் .

இதனை கருத்தில் கொண்டு மத்தியில் புதிதாக அமைய இருக்கும் புதிய அரசு அணைகளை கட்ட அனுமதிக்ககூடாது என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மாநில தலைவர் விசுவநாதன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments