NEWS UPDATE *** தென்காசி மாவட்டம் கடையத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது ************** “பாஜக – அதிமுக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி… மக்கள் தூக்கி எறியப் போவது உறுதி” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்! *** திருச்சியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதிமுக கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள்

திருச்சியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதிமுக கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள்

மே 1-ம் தேதி உலக உழைப்பாளர் தினத்தையும் முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் மினி லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி 14-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கீழக்குழிவார் ரோடு பகுதியில் இன்று காலை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதிமுக கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


முன்னதாக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கிட தலைவர் நாகராஜ் செயலாளர் வினோத்குமார்  மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் சங்கர் சாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


நிர்வாகிகள் பன்னீர்செல்வம் சின்ராசு கிருஷ்ணகுமார் கோபி ஆயூப்கான் ஆகியோர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் ‌

Post a Comment

0 Comments