NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** காங்கிரஸ் தலைவரை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் தலைவரை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  மற்றும் தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது இதன் காரணமாக காங்கிரஸ் கட்சினர்  மற்றும்  பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

 

இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி  பேசிய பேச்சு அண்ணாமலையும் , பாஜகவினரையும் அறுவருக்கதகையில் உள்ளதாக கூறி  காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் திருச்சி வேலுச்சாமி யை கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே பாஜகவினர்  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்


அப்போது செல்வப் பெருந்தகை மற்றும் திருச்சி வேலுச்சாமி ஆகியோரை கண்டித்து கோசங்களை எழுப்பினர் .


மேலும் அவர்களில்  புகைப்படங்களை  கிழித்தும், செருப்பால் அடித்தும், அவர்களின் படங்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்


புகைப்படத்தை எரிக்கும் போது  போலீசார் தடுத்து நிறுத்தினர் இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் ஒண்டிமுத்து,காளீஸ்வரன், எஸ்பி சரவணன்,ஊடகப் பிரிவு மாநில செயலாளர் கோபநாத், மாவட்ட தலைவர் முரளி,துணைத் தலைவர் சிவக்குமார். செயற்குழு உறுப்பினர் இந்திரன், வரகனேரி பார்த்திபன், மற்றும் மல்லி செல்வராஜ், ராஜேஷ், சதிஷ், கார்த்திக், ஜெயந்தி, மணிமொழி, சந்தோஷ், சதேஷ்,சுந்தர்ராஜ் கந்தசாமி கோபாலகிருஷ்ணா,நாகேந்திரன் ரவி,ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments