NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜனநாயகம் காப்போம் பொதுக்கூட்டம்

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜனநாயகம் காப்போம் பொதுக்கூட்டம்

இந்திய திரு நாட்டின் 78 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.. இதனையொட்டி திருச்சி பீமநகரில் உள்ள யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை  அலுவலகத்தில் ஜனநாயகம் காப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது..


இந்த கூட்டத்திற்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ரபீக் தலைமை வகித்து நபிகளாரின் ஜனநாயகம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.


இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெற்கு மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் அன்சாரி முன்னிலை வகித்தார்



யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி செயலாளர் சித்திக் வரவேற்புரை ஆற்றினார்.




மாவட்ட துணை செயலாளர் நஜிமுதீன் நன்றியுரை ஆற்றினார்.



இந்த நிகழ்வில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ‌பரிசுகள் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments