BREAKING NEWS *** "அளவற்ற வறுமையைத் தாண்டினார் எம்.ஜி.ஆர்" "கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்" "தமிழக அரசியலின் அதிசயம் ஆனார் எம்.ஜி.ஆர்" "இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்" -த.வெ.க தலைவர் விஜய் *** திருச்சியில் வருகிற 14 ஆம் தேதி பின்னணி பாடகர் "கார்த்திக் லைவ் இன் திருச்சி" இசைக்கச்சேரி

திருச்சியில் வருகிற 14 ஆம் தேதி பின்னணி பாடகர் "கார்த்திக் லைவ் இன் திருச்சி" இசைக்கச்சேரி

திரைப்பட பின்னணி பாடகர் "கார்த்திக் லைவ் இன் திருச்சி" இசைக் கச்சேரி திருச்சி விமான நிலையம் அருகே மொராய்ஸ் சிட்டியில் நடைபெறுவது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில்  நடைபெற்றது:-


திருச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் கார்த்திக் அவர்களின் நேரலை இசை கச்சேரி நடைபெறுவது குறித்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் இன்புளுராசன்ஸ் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி தஞ்சை சாலையில் உள்ள டி எம் ஆர் ரெசிடென்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது இதில் கார்த்திக் லைவ் இன் திருச்சி ஈவன்ட் நிர்வாகி ராஜன் ராஜ்மோலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


பிரபல பின்னணிப் திரைப்பட பாடகரான கார்த்திக் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , ஒடியா , பெங்காலி , மராத்தி மற்றும் இந்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 8000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக பாய்ஸ் திரைப் படத்தில் அவர் பாடிய "எனக்கொரு கெர்ல்பிரண்ட் வேணுமடா" என்ற பாடலும் கஜினியில் "ஒரு மாலை" பாடலும் அதேபோல் வாரணம் ஆயிரம் படத்தில் அவர் கானா வகையில் பாடிய "அவ என்ன" என்ற பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றதன் மூலம் ரசிகர் மனதில் நீங்கா இடத்தை தக்க வைத்துக் கொண்டார். 




இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திரைப்பட பாடகர் இசை அமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து இசை நிகழ்ச்சி ஒன்றை திருச்சியில் மிக பிரம்மாண்டமாக நடத்தினார்.



அதனைத் தொடர்ந்து திருச்சி ரசிகர்களின் செவிகளை இனிமையாக்கும் விதமாக ராஜ் மெலோடிஸ் ஏற்பாட்டில் பிரபல அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சார்பில் வருகிற டிசம்பர் 14‌ ஆம் தேதி, பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் கார்த்திக் அவர்களின் "கார்த்திக் லைவ் இன் திருச்சி இசை கச்சேரி திருச்சி விமான நிலையம் அடுத்துள்ள மொரைஸ் மெஜஸ்டிக்கில் நடைபெற உள்ளது

இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் கார்த்திக் நேரடி இசையின் மாயாஜாலத்தால் இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத இரவாக அமைய போகிறது என தெரிவித்தார். இந்த இசை நிகழ்ச்சியில் திருச்சி மக்கள் மற்றும் பின்னணி பாடகர் கார்த்திக்கின் ரசிகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கார்த்திக் லைப் இன் திருச்சி இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் தற்போது விற்பனையாகி வருகிறது என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments