NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச்சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட ராக்சிட்டி ஆட்டோ கன்சல்டிங் வெல்ஃபர் அசோசியேஷன் இணைத்து நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சி வர்த்தகர் அணியினர் ஆதரவு

தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச்சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட ராக்சிட்டி ஆட்டோ கன்சல்டிங் வெல்ஃபர் அசோசியேஷன் இணைத்து நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சி வர்த்தகர் அணியினர் ஆதரவு

 தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட ராக் சிட்டி ஆட்டோ கன்சல்டிங் வெல்ஃபர் அசோசியேசன் இணைந்து நடத்திய உரிமை கேட்பு போராட்டம் திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் நடைபெற்றது 


ந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி வர்த்தகர் அணி சார்பாக  திருச்சி மாவட்ட தலைவர் டாக்டர் பக்ருதீன் ,திருச்சி மாவட்ட செயலாளர் தென்னூர் அப்துல் மாலிக்,திருச்சி மாவட்ட துணை தலைவர் முஹம்மது அன்சாரி ,


சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் உபைதூர் ரஹ்மான் மற்றும் திருச்சி மேற்கு தொகுதி இணைச் செயலாளர் நபீஸ் அகமது மற்றும் தென்னூர் கிளை தலைவர் சையத் பாப் ஆஷிக் கிளைச் செயலாளர் ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டனர் 


இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையாக மோட்டார் வாகன ஆலோசகர்கள் தொழிலில் அரசின் புதிய சட்டத்தின் நெறிக்கடியை அகற்ற வேண்டும்

RTO அலுவலகங்களில் தற்போது உள்ள நடைமுறையை எளிமையாக்கும் விதமாக மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் விதிக்கப்படும் ஆன்லைன் அபராதம் போன்ற பல்வேறு தொழில் சார்ந்த நெருக்கடிகளை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் ஹெல்மெட் அபராதம் 100லிருந்து 1000 உயர்த்தியதை மாற்றி அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

SDPI கட்சி வர்த்தகர் அணி ஆதரவு அளித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments