NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மனிதநேய ஜனநாயக கட்சி மணப்பாறை சமுத்திரம் கிளை ஆலோசனை கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி மணப்பாறை சமுத்திரம் கிளை ஆலோசனை கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாநகர், மாவட்டம் மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட சமுத்திரம் கிராமத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி அவர்களது ஆலோசனைப்படி அரசியல் சேவை ஆற்றி கொண்டிருக்கும் சமுத்திரம் கிளை ஆலோசனைக் கூட்டம் மணப்பாறை நகரச் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில், மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் @ பாபு அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி M.முகமது ஷரிப் அவர்கள் கலந்துகொண்டு கட்சியின் நோக்கங்கள் செயலாற்ற வேண்டிய செயல்முறைகள் மற்றும் ஜாதி,மத,பேதங்கள் கடந்து செயலாற்ற வேண்டிய காலத்தின் தேவை குறித்தும் விரிவான விளக்க உரை ஆற்றினார்.


அதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து, தங்களது பகுதிக்கு உட்பட்ட மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது அதற்காக மேல் நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இக்கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் ஷேக் தாவூத் மாவட்ட துணைச் செயலாளர்கள் சடையன், ஷேக் அப்துல்லா, தர்வேஷ் மற்றும் நிர்வாகிகள் ஜாகீர், ஷேக் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர் அவர்களுக்கு கிளை நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


இறுதியாக நகரச் செயலாளர் சந்திரசேகர் நன்றி உரையாற்றி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.



Post a Comment

0 Comments