NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** எஸ்டிபிஐ கட்சி திருச்சி மாவட்ட வர்த்தகர் அணி மாவட்ட செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சி திருச்சி மாவட்ட வர்த்தகர் அணி மாவட்ட செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சி திருச்சி மாவட்ட வர்த்தகர் அணி  மாவட்ட செயற்குழு கூட்டம் வர்த்தகர் அணி மாவட்டத் தலைவர் DR.S.பக்ருதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


வர்த்தகர் அணி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.



இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வர்த்தகர் அணி  மாநில செயற்குழு உறுப்பினர் MAJ.சாதிக் பாஷா மற்றும்  எஸ்டிபிஐ கட்சி திருச்சி மாவட்ட துணை தலைவரும் வர்த்தகர்  அணியின் பொறுப்பாளருமான தளபதி அப்பாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டு வர்த்தகர் அணியின் வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1 :திருச்சி சத்திரம் பேருந்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை குறைந்த விலைக்கு வாடகை கொடுத்து அதை வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்


2‌: திருச்சி மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் இபி ரோட்டில் அமைந்துள்ள சின்ன மார்க்கெட் வணிக வளாகம்  மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாத  அவல நிலை உள்ளது. அதை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


3: திருச்சி மாரிஸ் தியேட்டர் அருகில் உள்ள மேம்பாலம் சீரமைப்பு பணிகள்  பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதனால் வணிகர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.அந்த பாலத்தை போர்க்கால அடிப்படையில் விரைந்து கட்டி முடிக்க வேண்டும்.

4 :நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொதுக் கழிப்பறை பயன்பாட்டில் இல்லாத நிலையில் உள்ளதால் பொதுமக்களும், வணிகர்களும், மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொதுக் கழிவறையை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அமைத்து தர வேண்டும்.வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்

Post a Comment

0 Comments