திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து, உலகப் புற்றுநோய் தினம் 2025-ஐ முன்னிட்டு "United by Unique" (தனித்துவத்தால் ஒன்றிணைவோம்) என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு பேரணியை மிக பிரமாண்டமாக நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தனியார் கல்லூரிகளை சேர்ந்த செவிலியர் மாணவிகள், பிங்க் கிராஸ் சொசைட்டி, ரோஸ் கார்டன் புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் என 700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உலகப் புற்றுநோய் தினத்தையொட்டி திருச்சியில் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சார்பில் மாபெரும் விழிப்புணர்வுபேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் டாக்டர் S.குமரவேல் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கலந்து கொண்டு தலைமை தாங்கினார் .
இந்த விழிப்புணர்வு பேரணி புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது. புற்றுநோய் ஒரு உயிருக்கு ஆபத்தான நோயாக இருந்தாலும், அதற்கான உரிய முன்னேற்பாடு மற்றும் சிகிச்சைகள் மூலம் நிவாரணம் பெற முடியும் என்பதையும், நோயை தடுப்பதற்கான முறைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதே இந்த பேரணியின் நோக்கம்.உலகளவில் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், அனைவரும் தங்களுடைய உடல்நலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், சரியான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் புற்றுநோயை தடுப்பது மிகவும் முக்கியம் என்பதையும் இந்த பேரணி வலியுறுத்தியது.மாபெரும் பேரணி ஆனது அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது நிறைவு பெற்றது.
0 Comments