NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமையும் காய்கறி மார்க்கெட் வடிவமைப்பு குறித்து உறுதி செய்ய வேண்டும் இல்லையேல் போராட்டம் காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமையும் காய்கறி மார்க்கெட் வடிவமைப்பு குறித்து உறுதி செய்ய வேண்டும் இல்லையேல் போராட்டம் காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

திருச்சி பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் 9ம்தேதி திறக்கவுள்ள நிலையில், அன்றையதினம் பேருந்துநிலையத்திற்கு எதிரே புதிய மார்க்கெட் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காந்திமார்க்கெட் வியாபாரிகளின் ஆலோசனைகளை கேட்காமலும், காய்கறிகள், பழங்கள், வெங்காயம், மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரத்திற்கு என ஒதுக்கீடு செய்ய உள்ள கடையின் அளவு, நெரிசலை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விளக்கங்கள் இதுவரையிலும் தெரிவிக்கப்படவில்லை .


இதனையடுத்து, திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், தலைவர் காதர்மைதீன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புதிய மார்க்கெட் தொடர்பான விபரங்களை அளிக்க மனுஅளிக்கப்பட்டதுடன், முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தவும் தெரிவித்த நிலையில் ஆட்சியர் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் தங்களை அழைத்து பேச இருப்பதாகவும் கூட்டமைப்பு தலைவர் காதர் மைதீன் தெரிவித்தார்


கடந்த ஆண்டு புதிய மார்க்கெட் கட்டுமானம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் புறக்கணித்த நிலையில், தற்போது 2500 வியாபாரிகள் உள்ள நிலையில் புதிதாக கட்டப்பட உள்ள மார்க்கெட்டில், 872 வியாபாரிகளுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளதாகவும், வாழைக்காய்மண்டி, உருளை மண்டி, வெங்காயம் மண்டிக்கு போதுமானஇடம் ஒதுக்கப்படாமல் வியாபாரிகளை சமாதானப்படுத்தும் நோக்கிலேயே ஆட்சியாளர்கள் உள்ளனர் என குற்றம்சாட்டினர்.

முதல்வர் வருகைக்கு முன்னதாக, அமைச்சர்களைக் கொண்டு தெளிவான விளக்கம் அளிக்கவேண்டும் என்றும், ஏற்கனவே சத்திரம் பேருந்து நிலையம் கள்ளிக்குடி பகுதியில் கட்டப்பட்ட மார்க்கெட்டுகள் மூடியே கிடக்கும் பட்சத்தில், வியாபாரிகளின் ஆலோசனைகளை விளம்பர அரசு கேட்காவிட்டால் முதல்வர் வருகைக்கு முன்னதாக போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்

Post a Comment

0 Comments