திருச்சி MIET கல்லூரியில் 27 ஆம் ஆண்டு விளையாட்டு தின போட்டிகள் - வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது
திருச்சி குண்டூர் அருகே உள்ள MIET கல்லூரியில் 27 ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி சேர்மன் முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக ஏசியன் நீளம் தாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற தங்கப்பதக்கம் என்ற பிரேம்குமார் கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கல்லூரி துணைத் தலைவர் முனைவர் அப்துல்ஜலீல், கல்லூரி முதல்வர் முனைவர் நவீன்சேட் ஆகிய கலந்து கொண்டனர்.
கல்லூரி மைதானத்தில் விளையாட்டு வீரர் வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.இதனை தொடர்ந்து 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ரிலே ஓட்ட பந்தயம் போட்டிகள் நடைபெற்றது
இன்று நடைபெற்ற போட்டிகளை வெற்றி பெற்ற வீரர்,வீராங்கனைகளுக்கும்,மேலும், நடந்து முடிந்த கால்பந்து, கபடி, வாலிபால் மற்றும் பல்வேறு போட்டிகளை வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
0 Comments