தமிழ் திரையுலகின் முன்னணி நாயகராக வலம்வந்து, தன் நடிப்பால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த சிவாஜிகணேசன் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி காலமானார்.
நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் 24ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
280க்கும் மேற்பட்ட படங்களில் தன்னிகரில்லா நடிப்பை வெளிப்படுத்தி, கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கொடிகாத்த குமரன், பகத் சிங், ராஜராஜ சோழன் போன்ற எண்ணற்ற வரலாற்று கதாபாத்திரங்களை கண்முன்னே நிறுத்திய சிவாஜி கணேசன் நினைவுநாளை முன்னிட்டு திருச்சி புத்தூரில் உள்ள சிவாஜிகணேசன் திருஉருவச்சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
இந்த நிகழ்வில் ஆர்.சி பிரபு , ஆர்.சி.ராஜா தலைமையிலும், T.சீனிவாசன், N.சண்முகம்,V.ராமதாஸ், மா.அய்யப்பன், சோனா ராமநாதன், S.பாலன், உறந்தை செல்வம், சண்முகராஜா மற்றும் அகில இந்திய திருச்சி மாவட்ட Dr.சிவாஜி, Dr.பிரபு, விக்ரம்பிரபு தலைமை மன்றம், உள்ளிட்ட சிவாஜி ரசிகர்கள் ஏராளமானவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
0 Comments