திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டி நடைபெற்றது.திருச்சி பிரைனோ பிரைன் சார்பில் ஆண்டுதோறும் அபாகஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில் 164வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி இன்று திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
5 முதல் 14 வயது குழந்தைகளுக்கான அபாகஸ் மனக்கணித போட்டி நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக பிரைனோ பிரைன் இன்டர்நேஷனல் தொழில்நுட்ப இயக்குனர் அருள் சுப்பிரமணியம் கலந்து கொண்டார்.
நிர்வாக இயக்குனர் ஆனந்த் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மண்டல பொறுப்பாளர் ப்ரியா சிவலிங்கம் முன்னிலை வகித்தார். நூற்றுக்கணக்கான மாணவிகள் ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
0 Comments