SDPI கட்சியின் SDTU தொழிற்சங்கம் திருச்சி மாவட்டத்தின் சார்பாக புதிதாக அமைந்துள்ள பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பஞ்சப்பூர் சுற்று வட்டார பகுதியிலிருந்து SDTU தொழிற்சங்கத்தின் 70க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மாநகராட்சி இணை ஆணையர் பாலு அவர்களை தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா அவர்களின் தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்
இந்த நிகழ்வில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்கரை மீரான் துணைத் தலைவர் முகமது வாசிக் ஊடகப் பொறுப்பாளர் அல்லாபகஸ் இணைச் செயலாளர் தமிமுல் அன்சாரி மற்றும் அப்பாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் SDPIகட்சி திருச்சி தெற்கு மாவட்ட மேற்கு தொகுதி தலைவர் முஸ்தபா மற்றும் தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0 Comments