// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமாகா விவசாய அணி சார்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமாகா விவசாய அணி சார்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், திருச்சி மேற்கு மாவட்ட தமாகா விவசாய அணி தலைவர் புங்கனூர்  செல்வம் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.

மாநில கொள்கை பரப்பு செயலாளர்  மதிவாணன் கொடியேற்றினார். மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.திருச்சி மத்திய மாவட்ட தமாகா தலைவர் திரு.KT  தனபால் பொங்கல் வழங்கினார்.‌மற்றும்  மாவட்ட செயலாளர் திரு.ராமகிருஷ்ணன் கிராம கமிட்டி தலைவர் அழகப்பன்,வட்டானத்தலைவர் ரெங்கபாஷ்யம், அருள்,நவீன்,கிருஷ்ண மூர்த்தி, நட்ராஜ் சத்தியன்,தர்மர், வெங்கடேஷ், ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments