// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி வாசன் கண் மருத்துவமனையில் நவீன கண்புரை அறுவை சிகிச்சை இயந்திரம் தொடக்கம்

திருச்சி வாசன் கண் மருத்துவமனையில் நவீன கண்புரை அறுவை சிகிச்சை இயந்திரம் தொடக்கம்

திருச்சி காட்டூர் பகுதியில் அமைந்துள்ள வாசன் கண் மருத்துவமனையில் அதிநவீன கண்புரை அறுவை சிகிச்சை இயந்திரம் மற்றும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் தொடக்க விழா  நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய முதன்மை மருத்துவ இயக்குநர் Dr. K. கமலபாபு (MBBS., D.O.,) அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.


அதில்... அனைவரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.கண் கண்ணாடிகளை உரிய பரிசோதனைக்குப் பின்னரே அணிய வேண்டும். முன்னெல்லாம் கண்புரை பாதிப்பு 60 வயதிற்கு மேல்தான் ஏற்படும். ஆனால், தற்போது 45 வயதிலிருந்தே கண்புரை ஏற்படுகிறது. எனவே, ஆரம்பக் கட்டத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிக அவசியம் என்றார்..

இந்நிகழ்வில் கண் அறுவை சிகிச்சை நிபுணர் Dr. K.N. செந்தில்குமார், மருத்துவர்கள் ரம்யா, ஜெயந்தி மற்றும் வர்த்தக பொது மேலாளர்  விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த புதிய வசதி மூலம், இப்பகுதி மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண் சிகிச்சையைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments