// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் வழக்கம் போல் செயல்படும்: தொ.மு.ச. மாவட்டச் செயலாளர் மலர்கண்ணன் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் வழக்கம் போல் செயல்படும்: தொ.மு.ச. மாவட்டச் செயலாளர் மலர்கண்ணன் அறிவிப்பு

நாளை அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் வழக்கம்போல் இயங்கும் என தொ.மு.ச. டாஸ்மாக் திருச்சி மாவட்ட செயலாளர் மலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சில டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் வழக்கம் போல் இயங்கும் என திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச. டாஸ்மாக் திருச்சி மாவட்ட செயலாளர் மலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments