// NEWS UPDATE *** "எடப்பாடி பழனிசாமி எதிர்காலத்தில் ஆளுநராக வேண்டுமானால் ஆகலாம்" - கனிமொழி பிரச்சாரம் *** ஆளுநர் விருதாளரைப் பாராட்டிய லட்சியம் படைப்பாளர் களம்!

ஆளுநர் விருதாளரைப் பாராட்டிய லட்சியம் படைப்பாளர் களம்!

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார்  அவரது மனைவி வழக்கறிஞர் மு.சித்ரா, அவர்களது மகள் வி.கீர்த்தனா உறுதுணை மற்றும் ஒத்துழைப்புடன் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் மனிதநேயப் பணியினை செய்து வருகிறார்.26 முறை இரத்ததானம் வழங்கி உள்ளார். வாழ்நாளிற்கு பிறகு உடல்தானத்திற்கு உறுதியேற்று திருச்சிராப்பள்ளி கிஆபெ விசுவநாதன் மருத்துவக் கல்லூரியில் உடல்தானத்திற்கு பதிவு செய்து உள்ளார்.

மேலும் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம் உள்ளிட்டவற்றை இல்லத்திலேயே வைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 25 வருடங்களாக செயல்பட்டு வருகிறார்.

அஷ்டாங்க யோகம், பிராணயாமம், தியானம் உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.இவரது சமூக சேவை மூலம் சமூகத்தில் ஆதரவற்றவர்கள் இறந்தால் ஒவ்வொரு மனிதனும் மதிக்கத்தக்க முறையில் கண்ணியமாக  இறுதி மரியாதை செலுத்துவது அவசியம் என்பதை ஏற்படுத்தியுள்ளார். 

குறிப்பாக மனைவி, மகளுடன் இணைந்து செயல்படுவது வருங்கால சந்ததியினருக்கு பெண்களும் ஆதரவற்ற உரிமை கோரப்படாத உடலுக்கு இறுதி சடங்கு செய்யலாம் என்பதை எடுத்துரைத்து வருகிறார். 

யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் தன்னலமற்ற மனிதாபிமான சேவையினால் குழந்தைகள், ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், சாலை, ரயில் விபத்தில்  இறந்தவர்கள்,

தொற்றும், தொற்றாத நோயாளிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் என பெயர் விலாசம் தெரியாத நபர்கள் உடலை சரக காவல்துறை காவலர்கள்  முன்னிலையில் இடுகாட்டில் உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வருகிறார். இவரது தன்னலமற்ற மனித நேயப் பணியைப் பாராட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் 2023 சுதந்திர தின விழாவில் நற்சான்றிதழும்,

22 மே 2025 திருவாடுதுறை ஆதீனம் இருபத்து நான்காவது குருமகா சந்நிதானம் மனிதநேய மாமணி விருதும், 

26 ஜனவரி 2026 ,

 குடியரசு தினத்தன்று தனிநபர்‌ பிரிவில் சிறந்த சமூக சேவையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த தனிநபர்

பிரிவில் முன் மாதிரியான சேவை,  அர்ப்பணிப்பு மற்றும் சமூக நலனில் .

கொண்ட தன்னலமற்றப் பணியைப் பாராட்டி 

2025 ஆண்டிற்கான ஆளுநர் விருதினை வழங்கினார்.  

லட்சியம் படைப்பாளர் களம் நிறுவனர் சதாசிவம் தலைமையில், ஸ்ரீ செல்வ பந்தம் குழுமம் இயக்குனர் மாரிமுத்து

ஆளுநர் விருது பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு 

பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

முனைவர் லாவண்யா, லட்சியம் படைப்பாளர் களம் திருச்சி கௌரவத் தலைவர் கவிஞர் பொன்மலர்,செயல் தலைவர் ஐசக் அருள்ராஜ், தலைவர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன், கிரேஸ் முதியோர் இல்ல இயக்குநர் எமிலி ஜெசிந்தா, ஒயிட்ரோஸ் சமூக சேவை அமைப்பு தலைவர் சங்கர், சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை நிறுவனர் அய்யாரப்பன் 

உட்பட பலர் பாராட்டினர்.

Post a Comment

0 Comments