// NEWS UPDATE *** "எடப்பாடி பழனிசாமி எதிர்காலத்தில் ஆளுநராக வேண்டுமானால் ஆகலாம்" - கனிமொழி பிரச்சாரம் *** தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்

தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்

 திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் புத்தூர் பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், எழுத்தாளர் சிவன் ராஜேந்திரன், அஞ்சல் தலை சேகரிப்பாளர் ஸ்டான்லி உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். 

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் குறித்து பேசுகையில்,

கோடைகால தண்ணீர் பந்தல் என்பது கடும் வெயிலில் தாகத்துடன் வரும் வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க, சாலையோரங்களில் அமைக்கப்படும் ஒரு பொதுவான நீர் விநியோக மையமாகும். தமிழர்களின் தொன்மையான பண்பாட்டின் அடிப்படையில், தகிக்கும் கோடை வெப்பத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த பந்தல்களில் குடிநீர், மோர் போன்றவை வழங்கப்படும். 

கோடைகாலத்தில் நீரிழப்பைத் தவிர்க்க, தாகம் இல்லாவிட்டாலும் சீரான இடைவெளியில் தொடர்ந்து தண்ணீர் அருந்துவது அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், அவ்வப்போது தண்ணீர் குடிப்பது அவசியம். 

மண்பானையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.குளிர்ச்சியையும், தண்ணீரின் சத்துகளையும் பாதுகாக்கும் தன்மை, மண்பானைக்கு உண்டு. அதில், இருக்கும் நுண் துளைகள் வழியாக காற்று, உள்ளே சென்று வெளியில் வருவதால், எப்போதும் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். இந்த தண்ணீரை குடித்தால், வெயில் காலத்தில் உடலில் சேரும் இயற்கையான உஷ்ணம் தணியும்.

 மண்பானைகள் மூலம் அருந்தும் தண்ணீர், ஆரோக்கியத்தை உயர்த்தும் என்றார்.

Post a Comment

0 Comments