// NEWS UPDATE *** த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்கடனை முழுமையாக ரத்து செய்யக்கோரி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் *** தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் மற்றும் அறிவுப் பரவலுக்காக அர்ப்பணித்த வாழ்வை மேற்கொள்ளும் சமூக செயற்பாட்டாளர்!

தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் மற்றும் அறிவுப் பரவலுக்காக அர்ப்பணித்த வாழ்வை மேற்கொள்ளும் சமூக செயற்பாட்டாளர்!

தமிழ் உலகின் தொன்மையான செம்மொழி, அது தமிழரின் அடையாளம், பண்பாடு, வரலாறு மற்றும் அறிவுச் செல்வத்தின் உயிர்நாடியாகும். இத்தகைய தமிழ்மொழியின் வளர்ச்சி, பரவல் மற்றும் பாதுகாப்பிற்காகத் தன்னலமற்ற முறையில் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார் (எ) வெற்றிச்செல்வன் ஆவார்.

தமிழ் மொழி மீது கொண்ட ஆழ்ந்த பற்றும், வாசிப்பு பண்பாட்டை மக்களிடையே வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கமும் அவரை சமூகப் பணிகளுடன் இணைந்த தமிழ்த் தொண்டிற்கு வழிநடத்தியது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் நூல்களை மையமாகக் கொண்ட இலவச நூலகத்தை நடத்தி வருகிறார்.

இந்நூலகம் வெறும் புத்தக சேமிப்பு நிலையமாக இல்லாமல், தமிழ் அறிவைப் பரப்பும் இடமாக விளங்கி வருகிறது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை, வரலாறு முதல் அறிவியல் வரை, ஆன்மிகம் முதல் சமூக சிந்தனை வரை பல்வேறு துறைகளில் நூற்றுக்கணக்கான தமிழ் நூல்கள் வாசகர்களுக்காக வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ் வாசிப்பு பழக்கம் குறைந்து வரும் காலகட்டத்தில், தினசரி வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் “தினம் ஒரு புத்தகம் – ஓர் அறிமுகம்” என்ற தனித்துவமான முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இம்முயற்சியின் மூலம் தினந்தோறும் ஒரு தமிழ் நூலை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தி, அதன் ஆசிரியர், உள்ளடக்கம், சிறப்பம்சங்கள் மற்றும் சமூகப் பயன்களை எடுத்துரைத்து வருகிறார். இதன் மூலம் பல வாசகர்கள் புதிய தமிழ் நூல்களையும் எழுத்தாளர்களையும் அறிந்து வருகின்றனர்.

ஒரு மொழி வளர வேண்டுமெனில் அதன் எழுத்தாளர்கள் சமூகத்தால் அறியப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், பல்வேறு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். புதிய எழுத்தாளர்கள், மாவட்ட அளவிலான படைப்பாளிகள் மற்றும் மறைக்கப்பட்ட இலக்கிய ஆளுமைகளை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் நூல் வெளியிட்டு வருகிறார்.

பல்வேறு துறைகளில் தாமும் எழுத்தாளராக விளங்கி வருகிறார். யோகா, தியானம், இயற்கை மருத்துவம், சமூக விழிப்புணர்வு, மனிதநேயம், இரத்த தானம், உடல் தானம், தமிழர் பண்பாடு, பண்டைய தமிழர் புழங்கு பொருட்கள், சேகரிப்புக் கலை, சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவரது நூல்கள் பொதுமக்களிடையே உடல், உள நல விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சமூகப் பொறுப்புணர்வையும் வளர்த்து வருகின்றன.

தமிழ்மொழி வளர்ச்சி என்பது வெறும் இலக்கியச் செயல்பாடுகளால் மட்டுமல்ல; தமிழ் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாப்பதாலும் சாத்தியமாகும் என்ற நோக்கில், பண்டைய தமிழர் புழங்கு பொருட்கள் காட்சியகத்தையும் நிறுவியுள்ளார். இக்காட்சியகத்தின் மூலம் தமிழர் வாழ்வியல், வேளாண்மை, கைவினை, குடும்ப மரபுகள் மற்றும் பண்பாட்டு பாரம்பரியங்களை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிமுகப்படுத்தி வருகிறார்.

தமிழ் நூல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் தொடர் முயற்சியாக நூலகச் சேவை, நூல் அறிமுகம், எழுத்தாளர் அறிமுகம், நூல் வெளியீடு, வாசிப்பு இயக்கம், பாரம்பரியப் பாதுகாப்பு, தமிழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வழிகளில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் பங்களித்து வருகிறார்.

தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் பண்பாடு மற்றும் தமிழ் வாசிப்பு இயக்க வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புமிக்க பணிகளை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார் (எ) வெற்றிச்செல்வன் மேற்கொண்டு வருகிறார்.

Post a Comment

0 Comments