// NEWS UPDATE *** "பொதுக்குழுவை கூட்ட சிவிஎஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தல். பொதுக்குழுவை கூட்ட கோரினால் கையெழுத்திட வேண்டாம்" தனது ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல் *** டாஸ்மாக் பணியாளர்கள் கடுமையான மன உளைச்சலில் பணியாற்றுகிறார்கள் -அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

டாஸ்மாக் பணியாளர்கள் கடுமையான மன உளைச்சலில் பணியாற்றுகிறார்கள் -அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் டாஸ்மாக் திருச்சி மேலாளர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.. 

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் 16 கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு நிர்வாகிகளின் சார்பாக பணிவான கோரிக்கைகளை முன் வைத்து உள்ளனர். 


அதாவது இரவு 10.00 மணிக்கு மேல் கடையில் கணக்கு வழக்குகள் பாாக்க காவல்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். கடையை விட்டு வெளியேற அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றனர். தற்போது மூடிய டாஸ்மாக் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு உடனடியாக மாற்று பணி வழங்குதல். கடந்த 6 மாதங்களாக காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தில், பணியஙாளர்கள் கடும் மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர். நிர்வாகம் இதனால் ஏற்படும் சிரமங்கள் அனைத்தையும் பாரத்துக்கொள்கிறோம் என உத்திரவாதம் அளித்தும், இதுநாள்வரை செயல்படுத்தவில்லை. 

உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்கும்படியாக பணியாளர்களின் பணிசுமையை குறைக்கவும் கேட்டுக்கொள்கிறோம். காலி மதுபாட்டில் திட்டத்தில் ஸ்டிக்கர் பயன்படுத்துவதினால் 10 ரூபாய் கூடுதலாக ஏன் வாங்குகிறீர்கள் என்று வாடிக்கையாளர்கள் செல்போனில் எங்களை படம் பிடித்து கூடுதல் பணம் எடுக்கிறீர்கள் என்று பொய்யான தகவலை அளிக்கிறார்கள். அவர்கள் அளிக்கும் தகவலை நிர்வாகம் அப்படியே நம்பி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்க வேண்டும். சரக்கு இறக்கு கூலி, சரக்கு பெட்டியில் வரும் பாட்டில்களின் டேமேஜ், காலி மதுபாட்டில் எடுக்க தற்பொழுது நியமித்திருக்கும் பணியாளர்கள் கூலி மற்றும் குடோன் வாடகை ஆகியவற்றிற்கு ஏற்படும் செலவினங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்.மேற்கண்ட 5 கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றித் தருமாறு திருச்சி மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments