திருச்சி பொறியியல் கல்லூரி 28 வந்து ஆண்டு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.MIET கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் அ. நவீன்சேட் அவர்கள் தனது வரவேற்புரையில் மாணவ மாணவிகள் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகரும், நகைச்சுவை கலைஞருமான சதீஷ் முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டு தனது கல்லூரியின் அனுபவங்களை பகிர்ந்தார்.வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை விடாமுயற்சி கடின உழைப்பு என்ற உயரிய சிந்தனையை ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் உணர்த்தினார். மேலும் கல்லூரி பருவத்தில் கல்வியறிவு முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை அடைய முடியும் என அறிவுறுத்தினார். பல்வேறு சாதனைகளை புரிந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள், நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 1800 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இயந்திரவியல் துறை தலைவர் கே. பன்னீர்செல்வம் நன்றி உரையாற்றினார்.


0 Comments