// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** கழிவுநீரில் இறந்து கிடந்த நபர்!நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

கழிவுநீரில் இறந்து கிடந்த நபர்!நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

திருச்சி, தீரன் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு அருகில் கழிவு நீர் வடிகால் பள்ளத்தில் கழிவுநீரில் பெயர், விலாசம் தெரியாத ஆண் நபர் மிதந்த நிலையில் இறந்து கிடந்தார். உடல் தண்ணீரில் ஊறிய நிலையில் இருந்தது. இருந்த நபர் டார்க் ப்ளூ கலர் கைலியும், கருப்பு கலர் பாக்கெட் ஜட்டியும், அதில் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றும் இருந்தது. பிங்க் கலர் முழுக்கை சட்டை அணிந்து இருந்தார். திருச்சி மாநகரம் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய காவலர்கள் அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்த போது அவரது பெயர், முகவரி அறிய முடியவில்லை. அவரது உடலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் ஏதுமில்லை. 

மேற்படி நபர் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்பட்ட பிரேதத்தை யாரும் உரிமை கோர வில்லை. உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி மாநகரம் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கிரிஸ்டிராஜ் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர், அண்ணாநகர், குழுமிக்கரை மயானத்தில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய சிறப்பு உதவியாளர் கிறிஸ்டிராஜ் முன்னிலையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

Post a Comment

0 Comments