திருச்சி அசூர் பிரிவு சாலையின் அருகே நடந்து சென்ற ரங்கசாமி என பெயர் மட்டும் தெரிந்த முகவரி தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம்பட்டு இருந்தவர் உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் துவாக்குடி அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு கொண்டு செல்லபட்டவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை சிகிச்சையில் சேர்க்கப்பட்டார்.
துவாக்குடி காவல் நிலைய காவலர்கள் பல முறை நேரில் சென்று விபத்தில் சிக்கியவரை விசாரித்த போது பாதிக்கப்பட்ட நபரின் பெயர் மட்டும் தெரிந்த ரங்கசாமி என்பவர் சுயநினைவு இல்லாமல் சிகிச்சையில் இருந்து வந்ததால் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை. சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த நபர் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வு
செய்யப்பட்ட உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் துவாக்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் நல்லடக்கம் செய்வதற்காக ஆதரவற்ற அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி, தென்னூர், அண்ணா நகர் குழுமிக்கரை மயானத்தில் துவாக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், முதல் நிலை காவலர் சத்தியராஜ் முன்னிலையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதை உடன் இறுதி சடங்கு செய்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அரங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

0 Comments