திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகம் அறிமுகம் திருச்சியில் நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், தமிழக ஆளுநர் விருத்தாளருமான யோகா ஆசிரியர் விஜயகுமார் எழுதிய திருச்சி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் தொகுப்பு நூலினை திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க செயலர் குணசேகரன், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன், முகமது சுபேர், தாமோதரன், குடியரசு இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் கமலக்கண்ணன், பஷீர் அகமது, ராஜ்குமார் உட்பட சேகரிப்பு கலைஞர்கள் பலர் நூலினை பெற்றுக்கொண்டனர்.
திருச்சி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் நூல் குறித்து நூலாசிரியர் விஜயகுமார் பேசுகையில்,சேகரிப்புக்கலை என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல,அது வரலாறு, பண்பாடு, அறிவியல் மற்றும் சமூக நினைவுகளைப் பாதுகாக்கும் உயரிய பண்பாட்டு இயக்கமாகும். ஒரு சிறிய பொருளின் பின்னணியில் மறைந்திருக்கும் காலத்தின் சுவடுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பாலமாகச் சேகரிப்பாளர்கள் திகழ்கின்றனர்.திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பல்வேறு வகையான அரிய சேகரிப்புகளில் ஈடுபட்டு, அவற்றை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்காகக் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி, பொது அறிவையும் வரலாற்று விழிப்புணர்வையும் பரப்பி வரும் சமகால சேகரிப்புக் கலைஞர்களின் அர்ப்பணிப்பைப் பதிவு செய்யும் முயற்சியாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

0 Comments