// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** திருச்சியில் சாதனை ஆசிரியர்கள் நூல் வெளியீட்டு விழா - சிறந்த ஆசிரியர்களுக்கு விருது

திருச்சியில் சாதனை ஆசிரியர்கள் நூல் வெளியீட்டு விழா - சிறந்த ஆசிரியர்களுக்கு விருது

திருச்சியில் சாதனை ஆசிரியர்கள் நூல் வெளியீட்டு விழா - சிறந்த ஆசிரியர்களுக்கு விருது - தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியம்  தலைவர் கு.ப.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

திருச்சியில் ஞாயிறு மலர் தமிழ் வார இதழ் சார்பில் சாதனை ஆசிரியர்கள் நூல் வெளியீட்டு விழா மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.


திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில மகளிர் அணி செயலாளர் ஆசியர் ரெ‌.மதனா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நூலை வெளியிட்டு, சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.


இந்த விழாவில் விழாவில் ஞாயிறு மலர் தமிழ் வார இதழ் ஆசிரியர் கிருஷ்ணகுமார் பழனிமுத்து வரவேற்புரை ஆற்றினார். சாதனை ஆசிரியர்கள் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட சிறந்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டு, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


இந்நூல் கல்வித்துறையில் சாதனை புரிந்த ஆசிரியர்களின் அனுபவங்கள் மற்றும் வெற்றிக் கதைகளை உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments