// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி 12 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் சூறாவளி பிரச்சாரம்

திருச்சி 12 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் சூறாவளி பிரச்சாரம்

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 12வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக பாலமுருகன் களமிறங்கி உள்ளார். 



முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து 05 02.22 அன்று அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கான சின்னம் 07.02.22 அன்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் போட்டியிடும் 12 வது வார்டுக்குட்பட்ட  மேலசிந்தாமணி, கீழசிந்தாமணி, மாதுளங் கொல்லை, கொசமேட்டுத்தெரு, வி.என்.நகர், காவேரி நகர், சுப்பிரமணியசாமி கோவில் தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, பாலகிருஷ்ணன் நகர், சஞ்சய் காந்திநகர், நடுத்தெரு, ஓடத்துறை, கரூர் பைபாஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்


பல ஆண்டுகளாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் இவருக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் தலைவர்கள் பிறந்த நாள் விழாக்களில் அன்னதானம் மற்றும் நல திட்ட உதவிகளை தனது வார்டு மக்களுக்கு வழங்கி வருகிறார். மேலும் இப்பகுதி மக்கள் இவரை தனது குடும்பத்தில் ஒருவராகவே கருதுவதால் பாலமுருகனின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.



Post a Comment

0 Comments