// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி 12 வது வார்டு சுயேட்சை வேட்பாளருக்கு தென்னை மரம் சின்னம் ஒதுக்கீடு

திருச்சி 12 வது வார்டு சுயேட்சை வேட்பாளருக்கு தென்னை மரம் சின்னம் ஒதுக்கீடு

 தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 4ஆம் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் இன்று ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.



அந்த வகையில் திருச்சி மாநகராட்சி மலைக்கோட்டை பகுதி 12 வது வார்டு பகுதியில் சுயேட்சை யாக போட்டியிடும் வேட்பாளர் பாலமுருகனுக்கு தென்னைமரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது



இதனையடுத்து அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு தனது சின்னமான தென்னை மரம் கன்றுடன் சென்று பாலமுருகன் வழிபாடு செய்தார். சுயேட்சை வேட்பாளர் பாலமுருகனுக்கு தென்னைமரம் சின்னம் கிடைத்ததை அப்பகுதி மக்களும் அவரது ஆதரவாளர்களும் கொண்டாடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments