// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது அதிமுக வட்ட செயலாளர் குற்றச்சாட்டு

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது அதிமுக வட்ட செயலாளர் குற்றச்சாட்டு

அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது அதிமுக வட்ட செயலாளர் பழனிச்சாமி குற்றச்சாட்டு 

இது குறித்து அதிமுக வட்ட செயலாளர் பழனிச்சாமி கூறுகையில்..,

அதிமுக முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ரூ. 5 லட்சம் பணம் கேட்டதாகவும் , பணம் கொடுக்க தாமதமானதால் தன் மகளுக்கு ஒதுக்கிய 51 வது வார்டு பகுதியை கூட்டணி கட்சியான த.மா.க விற்கு ஒதுக்கிவிட்டனர்.கண்டிப்பாக அந்த வார்டில் அவர் தோல்வி அடைவார்.


தேர்தல் செலவிற்காக  பகுதி செயலாளர் முஸ்தபா  என்பவரிடம் 25 ஆயிரம் பணம் கொடுத்தேன். அதை எனக்கு திருப்பி தரவில்லை. கட்சிக்காக  உழைத்தவருக்கு தேர்தலில் போட்டியிட வார்டு கொடுக்கவில்லை,  நேற்று  வந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சிக்கு  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 8ஆம் தேதி நாளை  வருகிறார்.அவரிடம் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அவர் உடன் இருப்பவர்களை களையெடுக்க வேண்டும் என கூறுவேன் என பேட்டியளித்தார். 

அ.தி.மு.க வட்ட செயலாளர் பழனிச்சாமி என்பவர் வெல்லமண்டி நடராஜன் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments