BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சியில் தேர்தல் விதிமுறைமீறல் தொடர்பாக 17 வழக்குகள் பதிவு...! திருச்சி மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருச்சியில் தேர்தல் விதிமுறைமீறல் தொடர்பாக 17 வழக்குகள் பதிவு...! திருச்சி மாவட்ட ஆட்சியர் பேட்டி

நகர்புற உள்ளாட்சி  தேர்தல் கடந்த 19ம்தேதி நடைபெற்றது.   வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால்முகம்மது கல்லூரி, உருமு தனலட்சுமி கல்லூரி உள்ளிட்ட 7இடங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8மணிமுதல் வாக்குஎண்ணிக்கை தொடங்கும்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆட்சியர்  செய்தியாளர்களை சந்தித்தார்



வாக்கு எண்ணும் மையத்தில் 3அடுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது, தபால்வாக்குகள் முடிந்தஉடனேயே மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும், மாநகராட்சியைப் பொருத்தவரை ஒருவார்டுக்கு 18வாக்கு மையங்கள் இருப்பதனால், 9மேஜைகள் அமைக்கப்பட்டு 2சுற்றுகள்வீதம் வாக்கு எண்ணப்படும், 3524தபால்வாக்குகள் அனுப்பபட்டு எத்தணை வாக்குகள் பதிவானது என்பது நாளை தெரியவரும். மார்ச் 2ம்தேதிவரை கொரோனா விதிமுறைகளின்படி கூட்டம் கூட அனுமதிக்கவில்லை, சமயவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதற்கு தடைநீடிக்கிறது. 56வது வார்டில் திமுக வேட்பாளர் 2வாக்குகள் பதிவுசெய்தது குறித்து ஆர்.ஓவிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், தேர்தல் முடிந்தபின்னரே விசாரணை மேற்கொண்டுவரும்நிலையில் அதன்பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் எடுத்து விசாரணை மேற்கொண்டு தேர்தல் தொடர்பான வழக்கு என்பதால் நீதிமன்றம் முடிவுசெய்யும் என்றார். வாக்கு எண்ணும் மையத்தில் 120சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படியும், உயர்நீதிமன்ற உத்தரவின்படியும் பெட்டிகள் வைத்துள்ள அறையிலும் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைமீறல் தொடர்பாக 17வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது, குற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



Post a Comment

0 Comments