// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி 3வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வி மனு தாக்கல்

திருச்சி 3வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வி மனு தாக்கல்


திருச்சி 3வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வி மனு தாக்கல்

தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மனு தாக்கல் செய்து வருகின்றனர். 




அந்த வகையில் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று திருச்சி மாநகராட்சி மலைக்கோட்டை பகுதிக்குட்பட்ட 3வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும்  செல்வி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில்  தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை வழங்கினார். 
3வது வார்டு செல்வி அவர்கள் மனு தாக்கல் செய்துவிட்டு வரும் பொழுது தனது ஆதரவாளர்கள் தனது உறவினர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்

Post a Comment

0 Comments