// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி 51 வது வார்டு வேட்பாளருக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

திருச்சி 51 வது வார்டு வேட்பாளருக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

 திருச்சி 51 வது வார்டு வேட்பாளருக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு. 



தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 4ஆம் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் இன்று ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.


அந்த வகையில் திருச்சி மாநகராட்சி  51 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்  சம்சாத் பேகம் அவர்களுக்கு தீப்பெட்டி  சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது வார்டுக்குட்பட்ட பகுதி கிருஷ்ணன் கோவில் தெரு,காஜியார் தெரு, ஹீபர் ரோடு,பண்டரிநாதபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்..பீமநகர் பகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வாக்குகளை திரட்டி வருகிறார்.. திருச்சி பீமநகர் 51 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சம்சாத் பேகம் அவர்களுக்கு விஜய் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் 

Post a Comment

0 Comments