// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி 07 வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி 07 வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 7 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் பிரியா சிவக்குமார் போட்டியிடுகிறார்.


இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 7 வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீரங்கம் கீதாபுரம், மங்கம்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்வின்போது வட்டக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments