// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** நாமக்கல் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து...

நாமக்கல் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து...

 திருச்செங்கோடு பகுதியிலிருந்து  நாமக்கல் நோக்கி வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று நல்லிபபாளையம் அடுத்துள்ள பெட்ரோல் பங்கு முன்பு நேற்று இரவு சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கார் மீது அதிவேகமாக மோதியது.



இதில் சாலையோரம் நின்றுக்கொன்டிருந்த கார் 20 அடி  பின்னோக்கி சென்று அருகில் இருந்த இருசக்கர வாகனத்தின் மேல் ஏறியவாறு நின்றது.இச்சம்பவத்தில் சாலையோரம்  விபத்துக்குள்ளான காரில் இருந்த பெண்மணிக்கு கால் உடைந்து பலத்த அடி  ஏற்பட்டு மருத்துவமனயல். அனுமதிக்கபட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத கார் விபத்தை ஏற்படுத்தி  நிற்காமல் சென்ற நிலையில் அந்த காரையும் ஓட்டுநரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


__________________

நாமக்கல் செய்தியாளர் R.சரவணன்.

Post a Comment

0 Comments