// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திமுக கூட்டணி ம.ம.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு

திமுக கூட்டணி ம.ம.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு

திமுக  கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 28வது வார்டு பகுதியில் போட்டியிடும் பைஸ் அகமது அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு இக்கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசுகையில் திருச்சியில் குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி மேம்படுத்தபடும்.


திருச்சியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது

அதிமுக ஆட்சியில்  காவிரி பாலத்தை  சீர்செய்வதாக கூறி சுத்தியளில் அடித்து வலுவை இலக்கவைத்து விட்டார்கள்,அதனால் புதிய பாலம் அமைக்கப்படுகிறது.

திருச்சியில் 40 வருடம் உள்ளவர்களுக்கு பட்டா ஏற்பாடு செய்யப்படும் .

திருச்சியை  மிகப்பெரிய நகரமாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறோம்.

இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, தமுமுக மாநில பொருளாளர் சபியுல்லா கான், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments