// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** புனித மதர் தெரசா யுனிவர்சிட்டி சார்பாக சிறந்த சமூக சேவகருக்கான பட்டமளிப்பு விழா...!

புனித மதர் தெரசா யுனிவர்சிட்டி சார்பாக சிறந்த சமூக சேவகருக்கான பட்டமளிப்பு விழா...!

திருச்சியில்  புனித மதர் தெரசா யுனிவர்சிட்டியின் நிறுவனர்டாக்டர் விஜயசரஸ்வதி அவர்கள் தலைமையில் சிறந்த சமூக சேவர் களுக்கான கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது



திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் டாக்டர் செந்தில்நாதன் அவர்களும், டாக்டர் பிரசன்னா அவர் களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி வார்டு 5 ல் வசித்து வரும், சமூக சேவகரும், பாதிக்கப்பட்டவர்களின் சட்டப் போராளியும், வறியவர்களின் வழிகாட்டியின் சட்ட ஆலோசகரும், மாணவர்களுக்கான பொது அறிவை வெளிப்படுத்தும் மாணவர்களின் அறிவுக் களஞ்சியம் என்ற புத்தகம் மூலம் அறிவுப் புரட்சியாளருமான வழக்கறிஞர் திரு,ச, ஜெகன்ராஜ் அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரப் படுத்தியது




பேராசிரியர்கள் பேசும் போது வழக்கறிஞரின் சமூக சேவை தொடர்ந்து நடைபெறுவதற்கான ஒரு உந்துதல்தான் இந்த கெளரவ டாக்டர் பட்டம் என பாராட்டுத் தெரிவித்தார்கள், இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தலைமை பத்திரிக்கையாளர் நலச்சங்கத் தலைவர் டாக்டர் ஜான் எட்வர்டு அவர்களுக்கும், தேனி மாவட்ட வணக்கம் இந்தியா மற்றும் வணக்கம் தமிழகம் நிருபர் கோகிலா முருகேசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது

Post a Comment

0 Comments