// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** வனத்துறையினர் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக விற்பனை செய்த பச்சை கிளிகள் பறிமுதல்

வனத்துறையினர் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக விற்பனை செய்த பச்சை கிளிகள் பறிமுதல்

திருச்சி பாலக்கர  கீழப்புதூர்  குருவிக்காரன் தெரு பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு கூண்டு அமைத்து பச்சைக்கிளிகள் மற்றும் குருவிகள் வளர்த்து விற்பனை செய்வதாக வருவதாக திருச்சி மாவட்ட  வனத்துறை சரக அதிகாரிகளுக்கு  தகவல் கிடைத்து.




வனப்பாதுகாப்புபடை உதவி
வனப்பாதுகாவலர் நாகையா தலைமையில் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, கீழப்புதூர் பகுதியில் வீடுகளின் முன்பு விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வந்த 400க்கும் மேற்பட்ட பச்சை கிளிகள், 100க்கும் மேற்பட்ட முனியாஸ் குருவிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


குருவிகள் மற்றும் பச்சை கிளிகள் அனைத்தும் வனப்பகுதியில் வளர்வது, எனவே இதுபோன்று வீடுகளில் வளர்ப்பது சட்டவிரோதமாகும். அந்த வகையில் தற்போது மீட்கப்பட்ட பச்சை கிளிகள் மற்றும் குருவிகள் அனைத்தும் வனப்பகுதியில் கொண்டு விடப்படும், அதேநேரம் குஞ்சுகள் மற்றும் இறக்கை வெட்டப்பட்ட கிளிகள் அனைத்து அதன் இறக்கை வளர்ந்த பின்னர் வனப்பகுதியில் பறக்கவிடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments