// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி காந்திமார்க்கெட் வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது

திருச்சி காந்திமார்க்கெட் வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக  செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்கு தலைவர்  கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.  மூர்த்தி,  சபி  அகமது, ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் மே 5&ந்தேதி நடைபெறும் மாநாட்டிற்கு காந்தி    மார்க்கெட்டுக்கு முழுவதுமாக விடுமுறை  அளிக்கவேண்டும்.

 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கையகப்படுத்தும் காந்தி மார்க்கெட் கடைகள் கட்டும் போதும், பஞ்சப்பூரில் மத்திய வணிக   வளாக கடைகள் கட்டும்போதும் காந்தி மார்க்கெட்  வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை கேட்டு கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் எராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments