ஹிஜாப் தொடர்பாக இன்று கர்நாகட உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது... தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு "ஹிஜாப் இஸ்லாத்தில் கடமையில்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது...
இதன் மூலம் இஸ்லாம் சம்மந்தமாக முழு புரிதல் இல்லாமல் இந்த தீர்பை வழங்கிருப்பதை உணர முடிகிறது.
கர்நாடக உயர்நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் இஸ்லாம் பற்றிய அறியாமையை வெளிப்படுத்தியுள்ளது ஏனென்றால் உலகத்தில் வாழக்கூடிய எந்த முஸ்லிமாக இருந்தாலும் திருக்குர்ஆனையும் மற்றும் முகமது நபிகள் அவர்களுடைய வார்த்தையையும் மறுக்கமாட்டார்கள்...
மேலும் இஸ்லாத்தின் அடிப்படை இரண்டும்தான் இதை முஸ்லிம்கள் அனைவரும் பின்பற்றவேண்டியது கடமையாகும் என்பது முஸ்லிம் அல்லாதவர்களும் அறிந்துள்ள நிலையில் நீதிமன்றம் அறியாமல் இருப்பது மக்களுக்கு சந்தேகத்துடன் வியப்பை ஏற்படுத்துகிறது... மேலும் இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகத்தன்மைக் கொண்ட நாட்டில் இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 25 வழங்கிய மத உரிமையை பறிக்கும் தீர்ப்பாகத்தான் முஸ்லிம் சமுதாயம் பார்க்கின்றது.பாஜக ஆளும் மாநிலங்களில் இதைப்போல சிறும்பான்மையினர் அதாவது குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வஞ்சபோக்கை தொடுத்துவரும் நிலையில் அந்த மாநில நீதிமன்றங்களும் இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கும்போது இந்தியாவின் நான்கு தூண்களில் ஒரு தூண் நீதிமன்றம் ஆனால் அதன்மேலே உள்ள நம்பிக்கையை தகர்க்கும் விதமாகத்தான் இந்த தீர்ப்பை முஸ்லிம் சமுதாயம் பார்க்கின்றது ஏனென்றால் இத்தனை ஆண்டுகள் எழும்பாத பிரச்சணை தற்போது எழுப்படுவதில் முழுக்க முழுக்க பாஜக வின் மத அரசியல் இருக்கின்றது இதற்கு நீதிமன்றம் துணை போகிறதோ என்ற சந்தேகம் மேலும் இந்த தீர்ப்பின் மூலம் வலுப்பெறுகின்றது.
எனவே ஜனநாயக நாட்டில் ஒரு மதத்தினருடைய உரிமையை பறிக்கும் போக்கு கண்டத்திற்குரியது இது மதச்சார்பற்ற இந்திய நாட்டிற்கு உகந்தந்தல்ல என்பதை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ரபீக் கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்...
0 Comments