NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** உலக பூமி தினம்..🌍🌍 மரக்கன்று நடும் விழா

உலக பூமி தினம்..🌍🌍 மரக்கன்று நடும் விழா

 திருச்சியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு அகிலஇந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்  மாற்றம் அமைப்பு  இணைந்து  பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழி பாதிப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு துண்டறிகை வழங்கும் நிகழ்வு மரகன்று வழங்கி நடும் நிகழ்வு நடைபெற்றது.....

 

திருச்சி செங்குளம் காலனியில் உள்ள திருச்சி மாநகராட்சி அரசு தொடக்க பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி பணியாளர்கள் அகிலஇந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து  மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமான தல்ல இந்த பூமி பந்து பல விலங்குகள் பறவைகள் பூச்சிகளின் வாழ்விடம் இந்த பூமி என்பதை உணர்ந்து நாம் ஒவ்வொரும்  இந்த பூமியை பாதுகாக்க வேண்டும்....

இயன்றவரை நாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள குளம் குட்டை ஏறி மற்றும் ஆற்றினை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் நமது வீடுகளில் நாம் வசிக்கும்  பகுதியில் உள்ள உபயகமற்ற இடங்களில் நாம் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மரகன்றுகளை நட முயற்சி செய்வோம் நமது குறிக்கோள் எண்ணிக்கை அல்ல நாம் நடும் மரகன்றுகளை நாம் பராமரித்து அதை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.....

எத்தனை மரகன்றுகளை நட்டோம் என்பதை விட எத்தனை மரங்களை வளர்த்து உள்ளோம் என்பது தான் முக்கியம் ஆகவே நாம் நடும் ஓவ்வொரு மரகன்றுக்கும் உயிர் உள்ளது ஆகவே அதை பாதுகாப்பாக வளர்பது நம் ஒவ்வொருவருடைய கடமை என்பதை உணர்ந்து மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் இயற்கை பாதுகாப்பு          மனித குளபாதுகாப்பு என்கிற உறுதி மொழியை எடுத்து கொண்டனர்

 மேலும் பள்ளி வளாகத்தில்  கொய்யா மாதுளை நெல்லி உள்ளிட்ட பழ வகையிலான மரகன்றுகளை நட்டனர் இந்நிகழ்வை தொடர்ந்து ராமகிருஷ்ண நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது  வீடுகளுக்கு சென்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த துண்டறிக்கை மற்றும் பழவகையிலான மரகன்றுகள் வழங்கப்பட்டது....

 இந்நிகழ்வில் செங்குளம் காலனி மாநகராட்சி அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்      எஸ். சரஸ்வதி உதவி ஆசிரியர்   கே.மகாலட்சுமி அகிலஇந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் கௌரவ தலைவரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர்   எஸ். அண்ணாதுரை செயலாளர் ரோட்டரியன் வி. நாகராஜன் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா விளையாட்டு பிரிவு செயலாளர்    சுரேஷ் பாபு   ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பசுமை இந்தியா அமைப்பின் நிர்வாக இயக்குனர்            ஆர். முத்துசெல்வி உறுப்பினர் கவிதா     மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் அகிலஇந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான           ஆர்.ஏ.தாமஸ், தர்ஷன், பிரபு, அர்ஜுன்,மைக்கேல் கிருபாலட்சுமி, பாண்டி, ரோகிதா உள்ளிட்டோர் மற்றும் திரளான பள்ளி மாணவர்கள் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்....

Post a Comment

0 Comments