// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** திருச்சி மாநகராட்சி மேயரிடம் மனித நேய மக்கள் கட்சியினர் மனு

திருச்சி மாநகராட்சி மேயரிடம் மனித நேய மக்கள் கட்சியினர் மனு

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்ட தலைவர் ராஜா முகமது தலைமையில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் அவர்களை சந்தித்து திருச்சி மாநகர பகுதியில் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும்  மிகவும் அச்சுறுத்தலாக உள்ள தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களையும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளையும் அப்புறப்படுத்த வேண்டும் 


எனவும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப்பணிகளால் சேதமடைந்துள்ள திருச்சி மாநகரின் பிரதான சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் அவரிடம் மனு அளித்தனர்..


 முன்னதாக புதிய மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் வைத்தியதாதன் அவர்களுக்கு திருச்சி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தனர்..  இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளரும் மாநகராட்சி 28 வது வார்டு மாமன்ற உறுப்பினர்  பைஸ் அகமது தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம் ,மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி மாவட்ட துணைச் செயலாளர் தமுமுக பிர்தவ்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments