// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருச்சி NIT- யில் ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் சுபாஷ் சர்கார்

திருச்சி NIT- யில் ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் சுபாஷ் சர்கார்

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஒற்றுமைக்காக ஓடவும் என்ற கருத்தை வலியுறுத்தி ஒற்றுமை நடை பயணம் நடைபெற்றது.

மத்திய கல்வித்துறை இணைய அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் ஒற்றுமை நடைப்பயணத்தை கொடியசைத்து துவங்கி வைத்து ஓடினார்.


திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக வளாகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றுமை வலியுறுத்தி விழிப்புணர்வு விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் நடை பயணத்தை தொடங்கி வைத்து பேசுகையில், நாட்டில் 532 மாகாணங்களில் ஒருமைப்படுத்துவதற்காக சர்தார் வல்லபாய் பட்டேல் பாடுபட்டு இருக்கிறார். மேலும் சர்க்கார் வல்லபாய் பட்டேலை பெருமைப்படுத்துவதற்காக இந்திய அரசு நாடு முழுவதும் இந்த நாளை வெகு விமர்சியாக கொண்டாடுகிறது.


தொடர்ந்து இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெருமைகளை எடுத்துரைத்து ஒருமைப்பாட்டு உறுதி மொழியை வாசித்தார். மாணவ, மாணவிகள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.




இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சர்த்தர் வல்லபாய் பட்டேலின் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து மோடி 20 என்ற புத்தகத்தை குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடுகிறார்.

இந்நிகழ்ச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் அகிலா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments