NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி மதுரம் மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம்

திருச்சி மதுரம் மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம்

 மதுரம் மருத்துவமனை, மதுரம் சுகாதாரம் கல்வி சேவா அறக்கட்டளை மற்றும் கிறிஸ்டியன் யூனிட்டி பெடரேசன் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மதுரம் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. மருத்துவர்கள் ஐவன் மதுரம், ஷர்மிலி மதுரம் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் பொது மக்கள், தன்னார்வலர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். தொடர்ந்து இரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.


இது குறித்து மருத்துவர் ஐவன் மதுரம் கூறுகையில்....


இரத்ததானம் செய்வதால் மாரடைப்பு வருவது குறைக்கப்படுகிறது. மேலும் இதயம் சம்மந்தமான நோய்கள் அனைத்தும் தடுக்கப்படுகிறது. புதிய இரத்த அணுக்கள் உருவாக ஊக்கப்டுகிறது. 



தேவையற்ற கொழுப்பு குறைக்கப்டுகிறது. தொடர்ந்து இரத்ததானம் செய்வதால் புற்றுநோய் தடுக்கப்படுகிறது. மேலும் தற்போது அதிகளவில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் இரத்தத்தின் தேவை அதிகரித்து வருகிறது. 





ஆதலால் அனைவரும் இரத்ததானம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments