அரியாசனம் - 2023-24 க்கான (எலிசியன்) என்ற குழுவால் புதிய ரோட்ராக்ட் அலுவலகப் பதவி ஏற்பு விழா திருச்சி தேசிய கல்லூரி டாக்டர் வி. கே. கிருட்டிணமூர்த்தி அரங்கத்தில் நடைபெற்றது.
தேசியக் கல்லூரி முதல்வர் டாக்டர் கே. குமார் அவர்களால் நிகழ்ச்சி உரை வழங்கப்பட்டது. Rtr கிஷோர் அவர்களால், Rtr ரேஷ்மா அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்யப்பட்டது. M.ராஜகோபால் இளைஞர் சேவை ரோட்டரி சங்கத்தின் தலைவர், Rtn.V.சிவகுமார் ரோட்டரி சங்கத்தின் தலைவர், ரோட்டரி சங்கத்தின் செயலாளர் கே. சுரேஷ் குமார் மற்றும் டாக்டர். டி.பிரசன்னா பாலாஜி துணை முதல்வர் (UAP) ஆகியோர் இந்த துவக்க விழாவில் கலந்துகொண்டு புதிய பொறுப்பாளர்களை பாராட்டினார்கள். சிறப்பு விருந்தினர் அவர்களால் தலைமை உரை வழங்கப்பட்டது
அதில் குழு எவ்வாறு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை விவரித்தார். 350க்கும் மேற்பட்ட ரோட்ராக்ட் உறுப்பினர்கள் இந்த துவக்கவிழாவில் பங்கேற்றனர். இவ்விழாவில் செயலாளர் Rtr தினேஷ் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.
நிருபர் ரூபன்
0 Comments