இந்திய தலைநகர் டெல்லியில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் பட குழுவினர் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் S. பாஸ்கரன் அவர்களை (தலைவர் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம்) அவருடைய அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்..
இந்த நிகழ்வில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் திரு. விஜயகார்த்திகேயன் IAS அவர்களும் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் படக்குழுவை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்..
இந்த நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் தலைவர் ஆர்.கே.குமார் பொதுச்செயலாளர் முனைவர் வி. எச்.சுப்பிரமணியம் மாநில மகளிர் பிரிவு தலைவர் லதா அர்ஜுனன் படத்தின் இணை இயக்குனரும் நடிகரும் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ் படத்தின் இயக்குனரும் திருப்பூர் மாவட்ட செயலாளருமான குமார் தங்கவேல் ஒளிப்பதிவாளர் யாசின் மற்றும் நஸீர் உள்ளிட்டோர் சந்தித்தனர்
0 Comments